திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு மதுரை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் 04.07.2025-ஆம் நாளிட்ட கடிதத்தில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா எதிர்வரும் 14.07.2025 (திங்கட்கிழமை) அன்று நடைபெற உள்ளதால், மேற்படி மஹா கும்பாபிஷேக விழாவை காண பொதுமக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் […]