பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டதற்கான மருத்துவ ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக்கி இழப்பீடு மறுக்க முடியாது என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் காயம் இருக்கிறதா இல்லையா என்பது பொருத்தமற்றது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதிகள் சேகர் பி. சராஃப் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, ஜனவரி 14 அன்று இந்த தீர்ப்பை வழங்கியது. […]

