இந்தியாவில் நிலங்களை பதிவு செய்வது கட்டாயம். இந்தியப் பதிவுச் சட்டத்தில் ரூ.100 மேல் மதிப்புள்ள சொத்தை எந்த விதத்தில் மாற்றினாலும், அது எழுத்துப்பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனால் தான் வீடு, கடை, ப்ளாட் அல்லது பண்ணை என எது வாங்கினாலும் அது கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால், நிலத்தை …
Land registration
நத்தம் மனைகளுக்கு, நிலங்களுக்கு ஆவணப் பதிவுகளுக்கு தாக்கல் செய்யப்படும் போது எவ்வித தாமதமும் இன்றி ஆவணம் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத்துறை ஐஜி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; …
தமிழகத்தில் பட்டாவில் பெயர் மாற்ற செய்ய அதிகமாக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால் வீட்டு மனைக்கான பத்திரம் மாற்றுவோர் பட்டாவில் பெயர் மாற்றத்தை சேர்த்தே செய்து கொள்கிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளது. இந்தப் பணிகளை மேற்கொள்ள நிலத்தை அளக்கும் நபர்கள் போதிய தமிழகத்தில் இல்லாததால் இதன் பணியில் பின்னடைவு உள்ளதாக தெரிகிறது.
நில அளவையர் பணியாளர் …
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களின் தலைமையில் சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை வளாகக்கூட்டரங்கத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்டப்பதிவாளர்கள் (நிர்வாகம் மற்றும் தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் / தனித்துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோரின் பணிச்சீராய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் வருவாய் ஈட்டும் …
சொத்துக்களுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மாற்றி அமைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை ரத்து.
தமிழகத்தில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன. எனவே வழிகாட்டி மதிப்பு மாற்றியமைக்கப்பட்டது.
மனையிடங்களின் வழிகாட்டி …
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு, 50 சதவீதம் மானியத்துடன், கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் (6 சதவீதம்) கடனாக பெற்று வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள், …
அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை படுத்துவதற்கான கட்டணத்தை திருத்தி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மனை வரன்முறை திட்டம் 2023 கட்டணம், அங்கீகாரம் இல்லாத மனை வரன்முறை திட்டம் தமிழக அரசால் 2017 ஆம் ஆண்டு தொடக்கி வைக்கப்பட்டது. இதனால் வரன்முறை இல்லாத மனைகளும் வரன் முறைப்படுத்த முடியும் என்ற நோக்கத்தோடு அரசாணையை அரசு வெளியிட்டது. …
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சுபமுகூர்த்ததினமான இன்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் …
கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழிற்முனைவோர் எளிதில் பட்டா பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் சிறுதொழில் 130 தொழிற்பேட்டைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பேட்டையில் அமையப் பெற்றுள்ள பெரும்பாலான நிலம் சிட்கோ பெயரில் மாற்றப்படாமல் சர்க்கார் புறம்போக்கு என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளது. சுமார் 60 ஆண்டிற்கும் மேலாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் …
மாநகராட்சி, நகராட்சி, கிராமப் பகுதிகளில் உள்ள மனையிடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் …