அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழிப்பாடம் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் ‘திறன்’ எனும் இயக்கம் 6 மாதம் […]