fbpx

இசைஞானி இளையராஜா வரும் 8-ம் தேதி லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற இருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது.. ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி …

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? …

மதுரையில் மழை பாதிப்புகளை சரி செய்து, இயல்பு நிலைக்கு கொண்டு வர போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண …

முதலீடுகளை ஈர்ப்பதாக நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டும் குறைவான முதலீட்டையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈர்த்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று, பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் …

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த கோவிந்தராஜ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை குகன்பாறை செவல்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் …

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளின் கல்வித் தரத்தை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தா நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இது முதலமைச்சர் தனது X தளப்பக்கத்தில், “மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் …

சுதந்திர தினம், குடியரசு தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. கடந்தாண்டு சுதந்திர தினத்தன்றும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தன. ஆனால், மழை காரணமாக ஆளுநர் மாளிகையே தேநீர் விருந்தை தள்ளிவைத்தது.…