திருட்டு புகாரில் இளைஞர் அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மீண்டும் அப்பகுதியில் திருட்டு புகார் வந்திருப்பது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் […]