விசாரணை என்ற பெயரில் மதுரை ஆதீனத்தை தமிழ்நாடு காவல்துறையை வைத்து திமுக தொந்தரவு செய்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக காவல்துறை இன்று மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்தது. தொடர்ந்து மத குருமார்களையும், ஆன்மீகப் பெரியோர்களையும் பல சொல்ல முடியாத இன்னல்களுக்கு உட்படுத்தி வருகிறது இந்தத் திமுக அரசு. […]