திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் வகையில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து ஜூன் 3-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடுவீடாக உறுப்பினர் சேர்க்கை பணிகளைத் தொடங்கி வைத்தார். இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலி வாயிலாக விருப்பம் உள்ளவர்களை […]

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இன்று எஸ்எம்சி குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) 2024-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் […]

அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25-ம் தேதி நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ; அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி) கூட்டம் கடந்த அக்டோபர் முதல் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இக்கூட்டத்தை மாதம்தோறும் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் முதல் எஸ்எம்சி குழு […]