தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா நிலுவையில் உள்ள நிலையில், சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 19) என்ற மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரைத்தொடர்ந்து அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வால் தந்தை மகன் தற்கொலை செய்தது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…