அனுமதியற்ற மற்றும் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க தமிழக அரசு ஏற்கனவே கால நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு […]

புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட வடஇந்தியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் குழந்தைகளைக் குறிவைத்து பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறது. குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் அதிக அளவில் விற்கப்படுகின்றன. பஞ்சு மிட்டாய்களில் […]

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற புதிய ரேஷன் அட்டைகள் கேட்டு பலர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை புதிய அட்டைகள் விநியோகிக்கப்படவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டதால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். […]

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு தன் பங்காக வீடு கட்ட 72 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; நாகப்பட்டினம் மாவட்டம் வெண்மணி ஊராட்சியில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 127 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு இதுவரை 75 பயனாளிகள் வீடுகளை கட்டி முடித்துள்ளனர். மீதமுள்ள 52 பயனாளிகளால் […]

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்தை மீறி 4.90 கோடிக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 2001-2006 அதிமுக ஆட்சியில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு […]

திட்டமிட்டபடி இன்று போக்குவரத்து வேலை நிறுத்த போராட்டம் தொடரும். போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்களின் பஞ்சப்படி நிலுவையை வழங்க வேண்டும் என 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், […]

மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி மற்றும் ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தற்போது நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பற்றி கேள்வி கேட்கின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டு விடக்கூடாது […]

தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமானது பொங்கல் பண்டிகையாகும். தைத்திங்கள் 1-ஆம் நாள் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அன்று தமிழர்கள் அனைவரும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து கொண்டாடுவர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசே ரேஷன் கடை மூலமாக தமிழர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கி வருகிறது. இந்த ஆண்டு மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் ரேசன் அட்டைதாரர்களுக்கு […]

தமிழ்நாடு முழுவதும் இன்று 100 இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு முகாம் நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மருத்துவ காப்பீடு முகாம் நடைபெற உள்ளது. புதியதாக திருமணம் ஆனவர்கள், விடுபட்ட குடும்பத்தினர் போன்றோர் இக்காப்பீட்டுத் திட்டத்தில் […]

தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. இந்தப் பண்டிகை வருகின்ற ஜனவரி மாதம் தமிழ் மாதங்களில் தை திங்கள் ஒன்றாம் நாள் கொண்டாடப்படும். இதற்காக தமிழக அரசின் சார்பில் சிறப்பான பொங்கல் பரிசு காத்திருக்கிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களோடு கரும்பு உள்ளிட்டவையும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு […]