தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2.04 மணி அளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏடிஆர் சிறிய ரக பயணிகள் விமானம் 62 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 67 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையை நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் சிறிதளவு லேசான விரிசல் ஒன்று விழுந்துள்ளது. இதை பார்த்த […]