உலக அரசியல் அரங்கில் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பதற்றத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் உரையாடினார். மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் மையமாகத் திகழும் ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பு குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக விவாதித்ததாக, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். […]

