சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு வேளாண்மையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்க, நிலத்தடி நீர் பாசனத்தில் மின்மோட்டார் பம்புசெட்டு அமைக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் மின்சார பயன்பாட்டுத் திறனை அதிகரித்தல் மற்றும் அதிகமான பாசன நீரினை குறைந்த செலவில் இறைத்தல் ஆகிய நோக்கத்திற்காக செயல்படுத்தி வருகிறது. நடப்பு 2025-26 ஆம் ஆண்டில் […]