சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் ஆகும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவு, தமிழக இளைஞர்கள் மத்திய அரசு வேலை வாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. […]