தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணைய உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. இணையதளம் மூலம் இந்த விண்ணப்பங்களை 24.10.2025 வரை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் பொறுப்புக்கு பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவால் ஆய்வு செய்யப்படும். தகுதி, அனுபவம் மற்றும் ஒட்டுமொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வுக்குழு இறுதி தேர்வை மேற்கொள்ளும். […]