நவராத்திரி திருநாளில் ஆறாவது நாளில் வழிபடும் சக்தியின் மறு உருவமாக திகழ்ந்துவரும் கடவுள்தான் காத்யாயனி. துர்கா தேவி எடுத்த ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அந்தவகையில் இந்த காத்யாயினி வடிவம் பல கைகளோடு இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது, காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படுகிறது. இது அமரகோசம் என்ற சமஸ்க்ருத அகராதியில் தேவி ஆதி பராசக்திக்கு வழங்கப்பட்ட இரண்டாவது […]

