fbpx

இந்தியா முழுவதும் உள்ள நகரங்களுக்கான காற்றுத் தரக் குறியீட்டு (AQI) தரவை ஜனவரி 9ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அதில், இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் மற்றும் சுத்தமான காற்றை கொண்ட நகரங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை முதலிடம்

அந்த வகையில், சுத்தமான காற்று இருக்கும் நகரம் என தமிழ்நாட்டின் திருநெல்வேலி …

நெல்லை மாவட்டம், களக்காடு பெருமாள் கோயில் அருகில் உள்ள கக்கன் நகரை சேர்ந்தவர் மாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவர் மற்றும் இரு மகன்களை பிரிந்து வாழும் மாலினி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மாலினியின் மகன் புவனேஸ்வரன் கேரளாவில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், புவனேஸ்வரனை அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் காதலித்து வருகிறார். …

விவசாய பயன்பாட்டுக்காக மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை தவறாக தொழிற்சாலை பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தினால் 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; “திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கான ரசாயன உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா …

கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரி உரிமையாளரை கைது செய்தனர்.

சமீபகாலமாக அண்டை மாவட்டமான தென்காசியில் மருத்துவக் கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கேரளாவிலிருந்து கொண்டு வந்து கொட்டப்படும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நெல்லை மாவட்டத்தில் மாநகரின் மிக அருகில் …

நெல்லை நீதிமன்ற வாசலில் நடந்த கொலை தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.

நெல்லை, பாளையங்கோட்டையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் மாவட்ட நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றம் முன்பு நேற்று காலை பொதுமக்களை பதற வைக்கும் வகையில் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலையோரம் சுமார் 22 வயது மதிக்கத்தக்க …

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் காவல்துறையினர் கண்முன் நடந்த படுகொலை. தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு எங்கே போய்விட்டது என‌ பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருநெல்வேலி நகரின் மையப் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்ற இளைஞர் பட்டப்பகலில் கொடூரமான …

தமிழகத்தின் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை …

20 கோடி ரூபாயில் தனது மகன் திருமணத்தை நடத்திய வருமான வரி சோதனை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் ஆர் எஸ் முருகன் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர்.எஸ்.முருகன், 65; நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர். அ.தி.மு.க., பிரமுகரான இவர், திருச்செந்துார் முதல் பாபநாசம் வரை, திருநெல்வேலி முதல் …

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தயாராகி வருகிறது அதிமுக. இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.

இக்குழுவில், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் …

ஜாதி ரீதியாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டியதால் நெல்லையில் கூண்டோடு வெளியேறிய கட்சி நிர்வாகிகள்.

திருநெல்வேலி -நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தங்களது குறைகளை கூறிய நிர்வாகிகளை, சீமான் ஜாதியை குறிப்பிட்டு திட்டியதால், வாக்குவாதம் செய்து அவர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். நாம் தமிழர் …