உலகின் முதன்முறையாக மருத்துவர்களின் உதவியின்றி மிகமிக நுட்பமான சிக்கலான பித்தப்பை அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட ரோபோவின் செயல் மருத்துவத் துறையில் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, தற்போதுள்ள அறுவைச் சிகிச்சை ரோபோக்கள், சிகிச்சையை மேற்கொள்வதற்காக அறுவை சிகிச்சை மருத்துவர்களால் தொலைவிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் புதிய அமைப்பு செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி, சுயமாக முடிவுகள் எடுத்து, அறுவைச் செயல்பாடுகளில் எதிர்பாராத சிக்கல்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கிறது என்று இந்த ஆய்வுக்கு […]