2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஏழை, பணக்கார மாநிலங்கள் அடங்கிய பட்டியலை மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை (NSDP) கோவா மாநிலம், ரூ.3.57 லட்சமாகப் பதிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் பீகார் ரூ.32,227 உடன் கடைசி இடத்தில் உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன. […]

