அரசுப் பள்ளி மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடத்துவதற்கான வழிகாட்டுதல் விதிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தன்னார்வலர் பணிகளையும், தனித்திறன்களை வளர்ப்பதுடன், சமூக வளர்ச்சிக்கான பங்களிப்புகளை அளிப்பதற்கும் நாட்டு நலப்பணித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான என்எஸ்எஸ் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில்; என்எஸ்எஸ் சிறப்பு முகாம் 7 நாட்களுக்கு நடத்தப்பட […]