ஜூன் மாத இறுதியில் பருவமழை தொடங்கியதில் இருந்து பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக, நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாக உள்ளூர் செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பாகிஸ்தானின் பஞ்சாபில் மொத்தம் 123 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது, அதைத் தொடர்ந்து கைபர் பக்துன்க்வாவில் 40, சிந்துவில் 21, பலுசிஸ்தானில் 16, இஸ்லாமாபாத்தில் 1 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் 1 பேர் உயிரிழந்துள்ளனர். […]