கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பால் 20 குழந்தைகள் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்திய பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாராவில் காய்ச்சல் மற்றும் இருமல், சளி பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிரப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை எடுத்துக்கொண்ட குழந்தைகள் திடீரென உயிரிழந்திருக்கின்றன. அதேபோல இராஜஸ்தானில், முதலமைச்சரின் இலவச மருத்துவ திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர் […]

