நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22% ஆக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. நடப்பு சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு […]
paddy
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பு நவம்பர் 30 வரை நீட்டிப்பு செய்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது, விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 26.25 லட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நாள் வரை, 6.27 லட்சம் விவசாயிகளால் 15 இலட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த […]
விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் விதைகள் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்: விவசாயிகளை உற்பத்தியாளர்களாகவும், தொழில்முனை வோராகவும், வர்த்தகர்களாகவும் உருவாக்கும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் இதன் மூலம் விவசாயிகள் நேரடியாக பயனடை முடியும் என்று தெரிவித்தார். விவசாயிகளின் நலன் கருதி ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறைகளில் மத்திய அரசு […]
தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆட்சியில் 2016-2017 முதல் 2020-2021 வரை 4 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மொத்த நெல் 1 கோடியே 13 லட்சத்து 51,469 மெட்ரிக் டன். இதில் ஆண்டுக்கு சராசரியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் 22 லட்சத்து 70,293 மெட்ரிக் டன் மட்டுமே. ஆனால், திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 2021-ம் […]
விவசாயிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காவிரி பாசன மாவட்டங்களில் அரும்பாடுபட்டு சாகுபடி செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படாதது குறித்து உழவர்கள் கதறி அழுது முறையிட்டாலும் கூட, கொள்முதலில் இன்று வரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக மழையில் நனைந்த நெல்லுடன் உழவர்கள் தவம் […]
அறுவடை செய்யப்பட்ட நெல் தொடர்மழையால் கூடுதலான ஈரப்பதம் இருப்பது தவிர்க்க முடியாதது. இதை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் பருவ மழையின் விளைவாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் […]
விவசாயிகளிடம் பெறப்பட்ட நெல்லில், அரிசி அரவையின் போது கலக்கப்பட வேண்டிய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் தான் நெல் மூட்டைகள் தேங்க காரணம் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் இந்த ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் நெல் விளைச்சல் அதிகம். தஞ்சாவூர் மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டு 299 நேரடி நெல் கொள்முதல் […]
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பிற மாவட்ட நெல்லை கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் கொள்முதல்- 2025-2026 சொர்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் மூலம் 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 5 நேரடி […]
தமிழகத்தில் இன்று முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விலையில் தமிழகம் முழுவதும் உள்ள நெல் […]
வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; மத்திய அரசு 2025-26-ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலையை தற்போது நிர்ணயித்து உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள சன்னரக நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,389 என்பதை ரூ.2,545-ஆகவும், பொதுரக நெல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,369 என்பதை ரூ.2,500-ஆகவும் உயர்த்தி முதல்வர் […]

