மேற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.. ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைப் போலவே பாகிஸ்தான் செயல்பட முயற்சிக்கக்கூடும்.. எல்லை தாண்டிய எந்தவொரு புதிய தாக்குதல் முயற்சியும் இந்தியாவிலிருந்து “வலுவான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. என்றும் எச்சரித்தார். மேற்கு எல்லையில் தொடங்கப்பட்ட இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெரிய அளவிலான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை […]

மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, ​​ஆயுதப்படைகள் ஐந்து பாகிஸ்தான் ஜெட் விமானங்களை சுட்டுவீழ்த்தியதாக இந்திய விமானப்படை வெள்ளிக்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஐ.நா.வில் தனது கருத்துகளின் போது இந்தியாவின் இராணுவ நடவடிக்கை தொடர்பான திரித்து கூறப்பட்ட உண்மைகளை முன்வைத்த சில நாட்களுக்குப் பிறகு, விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தக் கூற்றை மீண்டும் கூறினார். இந்தியா ஐந்து பாகிஸ்தான் […]

பொறுப்பற்ற, போர் வெறிக் கொண்ட, வெறுப்பூட்டும் கருத்துகளை வெளியிடும் பாகிஸ்தானை மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.. மேலும் எந்தவொரு தவறான செயலுக்கும் வேதனை தரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.. இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவது பாகிஸ்தானின் நன்கு அறியப்பட்ட செயல் முறையாகும் என்று கூறினார். மேலும் “இந்தியாவுக்கு எதிராக […]

பஹல்காம் தாக்குதலை திட்டமிட்ட சுலைமான் ஷா மற்றும் 2 பாகிஸ்தானிய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தினரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தளத்தில் பல பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில், ஒரு நேபாள நாட்டவர் உட்பட 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். தாக்குதல் […]

பஹல்காம் தாக்குதலை நடத்திய தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF)-ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். அமெரிக்காவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், இந்த முடிவு இந்தியாவும் அமெரிக்காவும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்கின்றன என்பதை நிரூபித்துள்ளது என்றும் கூறினார். எஸ் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்க பதிவில் “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து […]

இன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் நடந்து வருவதாக இந்திய ராணும் தெரிவித்திருந்தது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த துப்பாக்கிச்சூடு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் உதம்பூர் மாவட்டத்தில் […]