மேற்கு வங்கத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உள்ளூர் பஞ்சாயத்தின் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரின் சகோதரர் உட்பட குறைந்தது மூன்று பேர் படுகாயமடைந்தனர். பிர்பூம் மாவட்டத்தின் மார்கிராம் கிராமத்தில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக ராம்பூர்ஹாட் துணைப் பிரிவு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வெடிவிபத்தை தொடர்ந்து, அந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கிராமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், ராம்பூர்ஹாட்டில் அடையாளம் […]