fbpx

தமிழக அரசின் ஓய்வூதியர்களோ அல்லது அவரது துணைவரோ உயிரோடு இருக்கும்போதே குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான பயன்பெற நியமனதாரர்களை நியமிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள்‌ குடும்ப பாதுகாப்பு நிதித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ ஓய்வூதியதாரரின்‌ விருப்பத்தின்பேரில்‌, அவரின்‌ ஓய்வூதியத்திலிருந்து சந்தாத்‌ தொகை பிடித்தம்‌ …

மணிப்பூரில் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்கள் இனி அரசின் பென்ஷன் போன்ற சலுகைகளை பெற முடியாது மற்றும் மாநில அரசு வேலைகளுக்குத் தகுதி பெற மாட்டார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் தொடர்பு அமைச்சர் எஸ் ரஞ்சன் நான்கு குழந்தைகளுக்கு மேல் உள்ள எந்தவொரு நபரும் அல்லது குடும்பமும் வேலை தவிர பல்வேறு அரசு …

ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க இலவச எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புகார்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியாத ஓய்வூதியதாரர்கள் தங்களது புகார்களை தெரிவிக்க புதிய நடைமுறையை அரசு கொண்டு வந்துள்ளது. இப்போது நீங்கள் முதன்மை கணக்கு பொது அலுவலகத்தில் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல் அல்லது குறைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்யலாம்.

அதற்கான சில கட்டணமில்லா எண்கள் …

ஓய்வூதியதாரர்களின் மருத்துவ இழப்பீடு கோரிக்கையை நிராகரிக்கப்பட்டால் 30 நாட்களுக்குள் மாவட்ட அளவிலான குழு, மனுக்கள் மீது முடிவெடுக்கலாம் ‌‌.

மாத ஊதியதாரர்கள் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பட்ட மக்களையும் மிகவும் அச்சுறுத்தும் செலவுகளில் ஒன்று மருத்துவச்செலவு. எதிர்பாராமல் சில லட்சங்கள் வரை மருத்துவத்திற்கு செலவழிக்க வேண்டிய சூழலில் வருகிறது. அது போன்ற நேரங்களில் மருத்துவ காப்பீடுகள் …

முதியோர் ஓய்வூதியத் திட்டப் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித்தொகை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய திமுக, ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்துவிட்டது. இந்நிலையில், இந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், …

ஓய்வூதியர்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ அடுத்த மாதம் 28-ம் தேதி நடைபெறும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌.

தருமபுரி மாவட்டத்தில்‌ ஓய்வூதியர்‌ குறை தீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌, தருமபுரி மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ சென்னை ஓய்வூதிய இயக்குநர்‌ அவர்களால்‌ 28.10.2022 அன்று(வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில்‌ தருமபுரி மாவட்ட …

தியாகிகள் குடும்ப ஓய்வூதியம் வழங்கக்கோரி சுதந்திரப்போராட்ட வீரரின் மகள் அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க, கோவை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1995-ம் ஆண்டு வரை அவரது தந்தை சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தும், அவரது தாயார் ஓய்வூதியம் பெற்று வந்ததால், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குவதற்காக …

சென்னை தியாகராய நகர் சிவஞானம் சாலையில் உள்ள சென்னை நகர மத்திய கோட்டத்தில் அஞ்சலகங்களின் முதல்நிலை கண்காணிப்பாளரால் ஜூலை 28 அன்று காலை 11 மணிக்கு கோட்ட அளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

அஞ்சலகங்களில் பணியாற்றிய ஓய்வூதியர்கள், தங்களின் புகார்களை அல்லது ஆலோசனைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ்அப் மூலம் 18.07.2022-க்குள் அனுப்ப வேண்டும். …

கனரா வங்கியில் இருந்து ராஜினாமா செய்த ஊழியர், வருங்கால வைப்பு நிதி திட்டத்தை ஏற்கனவே தேர்வு செய்திருந்தால், ஓய்வூதிய திட்டத்திற்கான உரிமையை கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஜூலை 31, 2008 அன்று வங்கிப் பணியை ராஜினாமா செய்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட எஸ்.குணசேகரன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து …

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட, மாநில மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில் பயிற்சிகளை அரசு வழங்கி வருகிறது. அதேபோல …