பில்லியன் கணக்கான பயனர்களைப் கொண்ட வாட்ஸ்அப்பில், வரும் காலங்களில் விளம்பரங்கள் தோன்றவுள்ளன என்று மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் தனிப்பட்ட அரட்டைகள், அழைப்புகள், குழு உரைகள் ஆகியவை விளம்பரமில்லாமல் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டவை என்றும், அவை விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது […]