fbpx

மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் டிஜிட்டல் பண பரிமாற்ற முறையை மேற்கொள்வதற்கு ஏற்றபடி வங்கிகள் தங்களது பண பரிமாற்ற முறை எளிமையாக இருப்பதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

பணபரிமாற்ற முறைகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், வங்கிகள், அங்கீகாரம் பெற்ற வங்கி சாரா பணப்பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆகியவை எளிமையான …

மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் லாக் செய்ய நடத்துநர்கள் உதவ வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில்; மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முற்படும்போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி …

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID Unique Disability ID Card) விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் …

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயண்படுத்தவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி (KfW) நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். …

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற்றிட விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டினை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் …

வரும் 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக முதற்கட்டமாக காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரத்தில் …

தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமை மூலம்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறையால்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களுக்கு இ-சேவை தளம்‌ வழியாக மாற்றுத்திறனாளிகள்‌ விண்ணப்பிப்பதற்கு இணையதளம்‌. ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தளம்‌ வாயிலாக தற்போது 5 திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி உதவித்தொகை விண்ணப்பம்‌, உதவி உபகரணங்கள்‌ பெறுவதற்கான விண்ணப்பம்‌, வங்கி கடன்‌ மானிய விண்ணப்பம்‌, திருமண உதவித்தொகை விண்ணப்பம்‌, மாதாந்திர பராமரிப்பு …

மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை 2023-2024-ஆம் நிதியாண்டு முதல் இருமடங்காக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்‌ தொகையினை இரு மடங்காக உயர்த்தியும்‌ மற்றும்‌ 2013-2014-ஆம்‌ நிதியாண்டில்‌ இத்திட்டத்திற்காக ரூ.6.50 கோடி நிதி ஒப்புதல் வழங்கியும்‌ தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

2018- 2019ஆம்‌ …

ஒவ்வொரு வருடமும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிந்தவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களைத்‌ தேர்வுக்‌ குழு மூலம்‌ தேர்வு செய்து விருதாளர்களுக்கு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ விருதுகள்‌ வழங்கி ஊக்குவித்து கெளரவிக்கப்படுவதால்‌, அதனை கண்டு தமிழகத்தில்‌ உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக பணிபுரிபவர்கள்‌, மேலும்‌ சிறப்பாக பணிபுரிய வேண்டும்‌ என்ற …

மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் உயர்கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை கூறியதாவது; தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் …