தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், உலக வளர்ச்சிக்கான முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார். ‘ அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி’ என்ற கருப்பொருளில் அவர் உச்சிமாநாட்டில் உரையாற்றினார். ஜி20 உலகப் பொருளாதாரத்தை வடிவமைத்திருந்தாலும், தற்போதைய வளர்ச்சி மாதிரிகள் பலரின் வளங்களை இழந்து, இயற்கையை அதிகமாக சுரண்டுவதற்கு வழிவகுத்துள்ளன என்று மோடி கூறினார். ஆப்பிரிக்காவில் இந்தப் பிரச்சினை கடுமையானது என்று அவர் கூறினார். […]

