சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என்று சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு […]