தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நெல்லை மாவட்ட காவல் ஆயுதப்படையில் நகர்ப்புற பகுதிகளுக்கான புதிய ரோந்து வாகன திட்டத்தையும் ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகங்களை பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக […]