ஓய்வூதியதாரர்களுக்கு அஞ்சலகத்தின் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ். மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள், மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லங்களிலிருந்தபடியே, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை, அஞ்சலக ஊழியர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை நகர மண்டல […]

அஞ்சல் துறை மதுரை தெற்கு மண்டலத்தில் உள்ள பதினேழு அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் செயல்படுத்தியுள்ளது. இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாட்டின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அஞ்சல் கோட்டங்களில் உள்ள பதினேழு தபால் நிலையங்களில் ஏடிஎம் சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது.புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஏடிஎம் இயந்திரங்கள் அஞ்சல்துறையால் நிறுவப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்பகத்தன்மையுடன், பாதுகாப்பான […]

முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்ட பயனாளிகளுக்கு மருந்து விநியோக சேவைகளை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழ் செயல்படும் மருந்தகங்களில் கிடைக்காத மருந்துகளை பெற்று வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் பிரத்யேக சேவையை முன்னாள் ராணுவ வீரர்கள் துறையுடன் இணைந்து அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.இந்த முன்முயற்சி திட்டத்தின் கீழ் கிராம நிலையிலான தொழில்முனைவோரின் பொதுச்சேவை மையங்கள் மூலமாக மருந்துகளை கொள்முதல் மற்றும் பேக்கேஜ் செய்து […]

தமிழக அஞ்சல் துறை சார்பில், நடக்க உள்ள குறை தீர்க்கும் முகாமுக்கு வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை 22-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; டாக் சேவா ஜன் சேவா’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக வட்டம் அஞ்சல் துறை சார்பில், வட்ட அளவிலான வாடிக்கையாளர் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11,832 […]

நாடு முழுவதும் இன்று முதல் ஸ்பீட் போஸ்ட் ( விரைவு அஞ்சல்) மூலம் தான் அனுப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று முதல், தபால் துறை, செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் செயல்திறனை மேம்படுத்தவும், விரைவு அஞ்சல் மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைகளை நினைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முக்கிய பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அம்சங்களைச் சேர்ப்பதற்கும் கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கும் வாடிக்கையாளர்கள் […]

அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. அஞ்சல்துறை ஓய்வூதியர்களுக்கு கோட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம் நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சென்னை 600 017 என்ற முகவரியில் நாளை காலை 11.00 மணியளவில் ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. அஞ்சலகங்களுடன் தொடர்புடைய ஓய்வூதியதாரர்கள் ஏதாவது புகார்கள் இருப்பின் அவற்றை தபால் மூலமாகவும், மின்னஞ்சல் (dochennaicitycentral@indiapost.gov.in) […]

தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 3, 4 ஆகிய நாட்களில் சென்னை பொது அஞ்சலகம் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சென்னை பொது அஞ்சலகத்தில் புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்ப மென்பொருள் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கொள்கையின்படி, நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இந்த மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை, தடையற்ற, பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்கு ஏதுவாக […]

அஞ்சல் சேவைக்கான உரிம மையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு. அஞ்சல் சேவையில் ஈடுபடுவதற்காக உரிமம் பெற்ற நிறுவனங்களை தொடங்குவதற்கு ஆர்வமுடைய, தகுதியுடைய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து அஞ்சல்துறையின் சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அஞ்சல் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், பணவிடை (எம்ஓ) ஆகியவற்றை பதிவு செய்தல் மற்றும் பல்வேறு சிறுவகை சேவைகள் உட்பட அஞ்சல் சேவைகளை மேற்கொள்வதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். நிறுவனங்களை நடத்துவதற்கு உகந்த […]