நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் அறிவித்தார். இந்த முடிவு தனது கட்சியால் கட்சியின் நன்மைக்காக எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். மேலும் “இது கட்சியின் நலனுக்காக நாங்கள் எடுத்த முடிவு. நான் போட்டியிட்டால், அது தேவையான நிறுவனப் பணிகளிலிருந்து என்னைத் திசை திருப்பிவிடும்.. .ட்சியின் பரந்த நலனுக்காக கட்சிப் பணிகளைத் தொடருவேன்,” என்று தெரிவித்தார். […]