செம்மண் கடத்தல் குறித்து செய்தி சேகரித்த செய்தியாளர் தாக்கிய கும்பல் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம், வலசையூர், அடிமலைபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செம்மண் வெட்டிக் கடத்தப்படுவது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் சிலம்பரசன், ஒளிப்பதிவாளர் நேதாஜி ஆகியோர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். இதில் சிலம்பரசன் காதுகேட்கும் திறனை […]