இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகள் , மாற்றுத் திறனாளி குழந்தைகள் உட்பட இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் பள்ளிக்கு வருகைபுரியாத மாணவர்கள் கல்வியை பாதியில் […]

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பியுள்ள கடிதத்தில்‌; அனைத்து அரசுப்‌ பள்ளிகளிலும்‌ பள்ளி மேலாண்மை குழு கூட்டம்‌ மாதம் தோறும்‌, முதல்‌ வெள்ளிக்கிழமை நடத்தப்பட வேண்டும்‌. அடுத்த பள்ளிமேலாண்மை குழு கூட்டம்‌ வரும்‌ 9-ம் தேதி பிற்பகல்‌ 3 மணி முதல்‌ 4.30 மணிவரை கட்டாயம்‌ நடத்தப்பட வேண்டும்‌. 2023-24-ம்‌ கல்வியாண்டில்‌ பள்ளி இடைநிற்றல்‌ இல்லாமல்‌ மாணவர்கள்‌ தங்கள்‌ படிப்பை தொடர்வதையும்‌, அனைத்து வகை அரசுப்‌ […]

அரசு தேர்வு துறை இயக்குனர்‌ சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள்‌, விடைத்தாள்‌ நகலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. மாணவர்கள்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைபதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள்‌ நகலை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. விடைத்தாள்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு அரசு தேர்வு துறையின்‌ […]

அரசு தேர்வு துறை இயக்குனர்‌ சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள்‌, விடைத்தாள்‌ நகலை இன்று மதியம்‌ முதல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. மாணவர்கள்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைபதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள்‌ நகலை பெற்றுக்‌ கொள்ளலாம்‌. விடைத்தாள்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு […]

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.. தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு நாளை மாலை வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள்‌ மூலமாகவும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. […]

பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்தத்‌ தேர்வினை எழுதுவதற்கு வரும்‌ 23-ம்‌ தேதி முதல்‌ 27-ம்‌ தேதி வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை […]

இன்று காலை 10 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், பிற்பகல் 2 மணிக்கு 11- ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். 2022-2023-ம் ஆண்டில்‌ 10 மற்றும்‌ 11-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ இன்று பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்விவளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ நூற்றாண்டு விழா கட்டடத்தின்‌ முதல்‌ தளத்தில்‌ வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, […]

10,11- ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும். இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர்‌ சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-2023-ம் ஆண்டில்‌ 10 மற்றும்‌ 11-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ மே 19-ம்‌ தேதி பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்விவளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ நூற்றாண்டு விழா கட்டடத்தின்‌ முதல்‌ தளத்தில்‌ வெளியிடப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌; 12-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள்‌ விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ மாணவர்கள்‌ தாங்கள்‌ படித்த பள்ளிகள்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ தாங்கள்‌ தேர்வு எழுதிய தேர்வு மையங்கள்‌ மூலமாகவும்‌ இன்று காலை 11 மணி முதல்‌ 13-ம்‌ தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌. தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாள்‌ நகல்‌ வேண்டுமா? அல்லது மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ செய்ய […]

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைய உள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான, 2022-23ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இறுதியாக இன்று வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு, இன்றுடன் நடைபெற்று முடிய உள்ளது. தேர்வினை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 பேர் எழுதுகின்றனர். விடைத்தாள் திருத்தும் மையமாக அமைக்கப்பட்டுள்ள […]