முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கு போட்டு FBI அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவை, டிரம்ப் தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. […]