fbpx

பாஜகவின் மூத்த தலைவரும், ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலருமான காமேஷ்வர் சௌபால், பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை தனது 68 வயதில் காலமானார். நீண்ட காலமாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தார். பீகாரில் வசிக்கும் இவர், நவம்பர் 9, 1989 அன்று ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.

68 வயதில் காலமான …

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்திரத்தின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக் கோராறு காரணமாக லக்னோவின் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலின்படி, அவர் கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு மதுராவில் இருந்தபோது அவரது உடல்நிலை மோசமடைந்தது. முதலில், குவாலியரில் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், செப்டம்பர் 8 …

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது பல தசாப்தங்களாக பாரதிய ஜனதா கட்சியின் அரசியலுக்கு எரியூட்டி வருகிறது. ஆனால் அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மக்களவைத் தொகுதியில் காவி கட்சி தோல்வியடைந்தது, கட்சியின் உ.பி. ராமர் கோயில் பிரமாண்டமாகத் திறக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு தோல்வி ஏற்பட்டது என்பது …

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணம் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆறு வருடங்கள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது..

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுனா கார்கே நேற்று ஆச்சாரியா பிரமோத் கிருஷ்ணமை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். கட்சியின் வரம்புகளை மீறி …

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர், பாஜகவின் ஆட்சியில் ஏழைகள் மிகவும் ஏழ்மை அடைந்து வருகிறார்கள். வாக்களிக்கும் முன் தங்கள் வாழ்க்கை நிலையை பற்றியும் மக்கள் யோசிக்க வேண்டும். ராமர் கோயில் கட்டியதைப் பார்த்து ஏமாந்து விடக்கூடாது. மத்திய அரசை ஏற்காதவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள், என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை பாஜகவின் மீது …

குஜராத் மாநிலத்தில் முறையாக அங்கீகாரம் பெறப்படாத கட்டிடம் இடிக்கப்படுவதை தடுப்பதற்காக இரும்பு வியாபாரி செய்த செயல் ஆஞ்சநேயத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தினர் குழப்பத்தில் இருக்கின்றனர்.

குஜராத் மாநிலத்தின் அங்கலேஷ்வரில் உள்ள காட்கோல் கிராமத்தில் ஜனதா நகர் குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருபவர் மோகன்லால் குப்தா. …

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சென்றதால் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரை சேர்ந்த இளம் தம்பதியினருக்கு 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இருவரும் நல்ல வேலையில் உள்ள நிலையில் தேனிலவிற்கு …

அயோத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடத்த ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது பிரதமர் மோடி தலைமை ஏற்று பிரதிஷ்டை நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை ஜாம்பவான்கள் முகேஷ் அம்பானி கௌதம் அதானி உட்பட 7,000-க்கும் அதிகமான சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் நேற்று ராமர் …

சாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவது இல்லை என்பதால், ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளன.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்கள் …

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கு மத்தியில் , ஒடிசாவில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோவிலும் இன்று திறக்கப்படவுள்ளது.

ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டத்தில் உள்ள ஃபதேகர் கிராமத்தில் 2017ம் ஆண்டு முதல் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. மலையின் உச்சியில் அமைந்துள்ள இக்கோயில், ‘பௌலமாலா’ கல்லைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து …