பெருவில் பிக்கப் டிரக் மீது பேருந்து மோதி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். லாமோசாஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பேருந்து ஒன்று, காரவேலி மாகாணத்தில் உள்ள சாலா என்ற நகரத்திலிருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரேக்விபாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பெரு மற்றும் சிலியை இணைக்கும் பனமெரிக்கானா சுர் நெடுஞ்சாலையில் வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிரே வந்த பிக்கப் டிரக் மீது மோதியதில் பேருந்து அருகில் […]

