எத்தியோப்பியா தேவாலயத்தில் உள்ள கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவி ன் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து 70 கி.மீ., தொலைவில் அம்ஹாரா பிராந்தியத்தில் அரெர்டி நகரம் உள்ளது. இந்நகரில் உள்ள மென்ஜார் ஷென்கோரா அரெர்டி மரியம் சர்ச்சில், ஆண்டுதோறும் மதவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த விழாவில் பங்கேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். […]