விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையை அடுத்த பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். பின்னர் மாநில மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்தும், ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]