சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாரத்மாலா பரியோஜனா போன்ற முன்னோடித் திட்டங்கள் மூலம் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 60% வளர்ச்சியடைந்துள்ளது. 2014-ல் 91,287 கிமீ …