தங்கள் பிள்ளைகளை அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர் இன்று(ஏப்ரல் 22) முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. …