காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐயங்கார்குளம் என்ற ஊரில் அமைந்துள்ளது சஞ்சீவிராயர் ஆஞ்சநேயர் திருக்கோயில். கிருஷ்ணதேவராயரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரபலமான மற்றும் பழமையான திருக்கோயிலாக இது இருந்து வருகிறது. கோயிலின் முன்புறத்தில் மிக உயரமான தூண்களுடன் பக்தர்களை வரவேற்கிறது.
இந்தக் கோயிலின் முன் பக்கத்தில் அமைந்துள்ள குளக்கரையில் வாவிக்கிணறு ஒன்று உள்ளது. கிணற்றுக்குள் ஆழமான படிகள் அமைக்கப்பட்டுள்ளது. …