நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் எனவும், பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 […]