திருநெல்வேலியில் செப்டம்பர் 7-ல் மாநில மாநாட்டில் பங்கேற்க கட்சி நிர்வாகிகளுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்: சமீபத்தில் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியிருக்கிறது. இதை எதிர்த்து சமீபத்தில் வாக்காளர் உரிமை பயணத்தை பிஹார் மாநிலத்தில் மக்களின் பேராதரவோடு ராகுல்காந்தி நடத்தியிருக்கிறார். வாக்கு திருட்டு […]

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்; சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம், கிராம கமிட்டியினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். வரும் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி.எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டணி குறித்தும், எந்த தொகுதிகளைக் கேட்க […]

அண்ணா பல்கலைக்கழக ஞானசேகரன் பற்றி பேசினால் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஏன் இத்தனை பதட்டமைடைகிறார் என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிசம்பர் 25-ம் தேதி ஞானசேகரனை […]