பாலியல் வன்கொடுமைக்கும், இளம் வயதினரின் உண்மையான காதல் வழக்குகளுக்கும் இடையே வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய அவசியத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் சம்மத வயதை 18லிருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.. இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. […]