உலகளவில், மூன்றில் ஒரு பெண் தன் கணவர் அல்லது மற்றவர்களால் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் சிறுமியருக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் சர்வதேச தினம் நவ.25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், 168 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், உலக சுகாதார அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. ஐ.நா.,வின் பல்வேறு அமைப்புகள் உதவியுடன் இது தொடர்பாக விரிவான ஆய்வு செய்யப்பட்டுள்ளது. […]

