இந்திய திரை உலகில் பிரபலமான பாடகராக வலம் வருபவர் யோ யோ ஹனிஷிங் என்று அழைக்கப்படும் ஹனி சிங். இவர் இசை தயாரிப்பாளர், ரேப்பர், பாடகர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் போன்ற பல திறமைகளை கொண்டவர். மேலும் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒளிப்பதிவு கலைஞராக வாழ்க்கையை தொடங்கினார்.இதன் பின்பு படிப்படியாக ரேப் பாடல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமானார். இவரது பாடல்கள் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமானது. இதனையடுத்து […]

பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யாயுக்கு பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை ஜந்தா பஜார் காவல் நிலையப் பகுதியில் உள்ள செந்துர்வா கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இது வெளிச்சத்திற்கு வந்ததாக போலீஸார் வியாழக்கிழமை தெரிவித்தனர். உபாத்யாயின் இடது தொடையில் அடிபட்டு, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் […]

பிரபல போஜ்புரி பாடகி நிஷா உபாத்யா மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாடகி உபாத்யாயின் இடது தொடையில் அடிபட்டு, பாட்னாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் […]

கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள தனது ஹோட்டல் அறையில் மயங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடகருக்கு மூளை அனியூரிஸம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது வெளியாகி உள்ள தகவல்கள் படி, அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் வெள்ளிக்கிழமை லண்டனின் துங் ஆடிட்டோரியத்தில், யோகோ ஓனோ லெனான் சென்டர், லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி நடத்த […]

தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகியான வாணி  ஜெயராம்  இன்று அவரது இல்லத்தில் மரணம் அடைந்துள்ள செய்தி  திரையுலகில்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில்  நவம்பர் 30, 1945 ஆம் ஆண்டு  பிறந்தவர் வாணி  ஜெயராம் . இவரது  இயற்பெயர் கலைவாணி என்பதாகும். 1971 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் மூலம்  பின்னணி பாடகி ஆக சினிமா உலகில் […]

இசைமாமணி விருது பெற்ற லலிதா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஐகிரி நந்தினி என்னும் பக்தி பாடல் இன்று வரை பலரது மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த பாடலை பாடியவர்கள் பம்பாய் சகோதரிகள் ஆவர். அவர்களில் இளையவரான லலிதா நேற்று உடல்நிலை குறைவு காரணமாக காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர் மும்பையில் படித்து சென்னையில் வசித்து வந்தார். சகோதரி சரோஜாவும் இவரும் சேர்ந்து பல பக்தி பாமாலைகளை பாடல்களைப் […]