கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், திமுக அரசு எதை மறைக்கப் பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ; கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. […]