பேரிடர் காலங்களில் ஈடுபடும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள்,திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் அடையாளம் காணப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்; தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 01.04.2025 முதல் 18.10.2025 வரைமொத்தமாக 11,87,000 சிறப்பு பராமரிப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்கள் 34,401 […]
Siva Sankar
தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 20,378 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,710 சிறப்பு பேருந்துகள் என 4 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 14,268 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு […]
கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் பெற அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், அறிவுசார் திறன் குறைபாடு உள்ளவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக […]
அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவின் வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் பல்வேறு புதிய கட்சிகளை, ஒவ்வொரு தேர்தலிலும் பாஜககளத்தில் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இப்போதும் அந்த தந்திரத்தை பாஜகவினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். வரும் தேர்தலில் இவற்றை முறியடித்து திமுக வெற்றி பெறும். பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று சொன்ன […]
மின் கட்டண உயர்வு குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்தாலும் வீட்டு மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இருக்காது. எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்” என மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சமூக வலைதளங்களிலும், சில செய்தி ஊடகங்களிலும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வந்த நிலையில், அது தொடர்பாக, […]
தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த […]

